தமிழ் சினிமாவிற்கு தீனி போடும் வெற்றிமாறனின் சொத்து மதிப்பு இவ்வளவா?
இயக்குனர் வெற்றிமாறனின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வெற்றிமாறன்
கோடம்பாக்கத்திலிருந்து பல கனவுகளுடன் சினிமாவிற்குள் நுழைந்த கலைஞன் தான் வெற்றிமாறன்.
இவருடைய அத்தனை கனவுகளையும் மெருகேற்றியவர் பாலுமகேந்திரா என்றும் கூறலாம்.
கடந்த 2007ம் ஆண்டு தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தின மூலம் முதல் வெற்றியை கண்டார்.
இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் 6 தேசிய விருதுகளை தட்டிதூக்கியது.
சிறந்த இயக்குனர் என தேசிய விருது பெற்ற வெற்றிமாறன் காக்கா முட்டை படத்தின் மூலம் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதையும் கைப்பற்றினார்.
பின்னர், நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற தரமான படத்தை கொடுத்தார். தற்போது அதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில் நேற்றைய தினம் இயக்குநர் வெற்றிமாறனின் 49வது பிறந்தநாள் என்பதால் அவரிடம் இருக்கும் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் வெற்றிமாறனிடம் சுமாராக ரூ. 30 கோடி வரை சொத்துக்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |