பிரபல இயக்குனர் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவனையில் அனுமதி! பதறிய திரையுலகம்;
கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகரித்துகொண்டிருக்க தமிழ் நாட்டிலும் பல கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தபட்டுள்ளன. அன்றாடம், திரைப்பிரலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு, நேற்று இரவு மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கஜேந்திரன் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.