இந்தியன் 2 குறித்து ரசிகர்களுக்கு முக்கிய அறிவிப்பை பகிர்ந்த இயக்குனர் ஷங்கர்
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு வெளியூர்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அது குறித்த முக்கிய தகவலை இயக்குநர் ஷங்கர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் மிகுதி பகுதிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த வாரம், கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் உள்ளிட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒரு புதிய அட்டவணைக்காக தாய்வானில் உள்ள டாய்பேய்க்கு சென்றனர்.
படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர்கள் டாய்பேயை விட்டு வெளியேறுகிறார்கள் என்று இயக்குனர் இன்று சமூக வலைதளங்களில்அப்டேட் செய்தார்.
Bye Bye Taipei #indian2 P.C @dop_ravivarman pic.twitter.com/dGyUcmAKwP
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 7, 2023
அவர் தனது ட்விட்டரில் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு,அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குழு தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கிற்கு செல்லுவார்கள் என்று தகவல்கள் வெளியாகின.
அங்கு ரயிலில் அமைக்கப்பட்ட ஒரு ஆடம்பரமான அதிரடி காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், இந்தியன் 2 இன் முதல் சிங்கிள் பாடலை விரைவில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பிரம்மாண்டமான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தியன் 2 இன் குழு நடிகர்களில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, விவேக், நெடுமுடி வேணு, யோகராஜ் சிங், குல்ஷன் குரோவர் மற்றும் பலர் உள்ளனர்.
இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.