இத சாமிக்கு விட்ருங்க.. ஒற்றை வீடியோவால் ரசிகர்களை கவர்ந்த செல்வராகவன்
“நமக்குள்ளே ஒரு விரோதி இருக்கான். அவன சாமிக்கு விற்றுங்க..” என இயக்குநர் செல்வராகவன் பேசிய காணாளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
செல்வராகவன்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன? உள்ளிட்ட பல படங்களை கொடுத்து, முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்பவர் தான் செல்வராகவன்.
இவர், காதல் என்று வரும்போது எல்லா மனிதர்களும் ஒன்று தான் என்பது போன்ற கருவை அவருடைய படங்களில் வைத்திருப்பார்.
தமிழ் சினிமாவின் “ஜீனியஸ்” என்றே பலரும் அழைக்கப்படும் செல்வராகவன், என்ஜிகே படத்தின் தோல்விக்கு பிறகு பிரேக் எடுத்திருக்கும் செல்வராகவன் பீஸ்ட், மார்க் ஆண்டனி, ராயன், சொர்க்கவாசல் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, இயக்குநர் செல்வராகவன் மீண்டும் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில், ரவி கிருஷ்ணா, அனஸ்வா ராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
சினிமா ரசிகர்கள் மத்தியில் 7ஜி ரெயின்போ காலனி படத்திற்கான 2ஆம் பாகம் எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத சாமிக்கு விட்ருங்க..
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் கடந்த சில வருடங்களாக ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன், புகைப்படங்கள் மற்றும் தத்துவங்கள் நிறைந்த காணொளிகளை பகிவார்.
அந்த வகையில்,“ நமக்குள் ஒரு விரோதி இருக்கிறான். நினைவு தெரிந்த நாளில் இருந்து தொடங்கி நீங்கள் இறக்கும் வரைக்கும கூடவே வருவான். எங்கே எப்படி எந்த விவரமும் தெரியாது. வெளியில் தேடாதீங்க. உள்ளே நீங்க என்ன செய்தாலும் உங்களை ஒருவன் கேட்டுக்கொண்டே இருப்பான்.
நம் வாழ்வில் எதிர்மறையாக எது நடந்தாலும் கவலைப்பட வேண்டாம் கடவுள் பார்த்துக்கொள்வார். உங்களுக்கு முழு நம்பிக்கையும் கிடைக்கும் முயற்சி செய்தால் எதுவும் நடக்கும்..” என பேசியிருக்கிறார்.
இந்த காணொளியை பார்த்த அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். அத்துடன், “ இவருக்கு என்னாச்சு ஒரே தத்துவமா வருது..” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |