பிரபல நடிகர் திடீர் மரணம்! தமிழ் திரையுலகில் மற்றொரு இழப்பு
பிரபல இயக்குனர் ராஜு முருகனின் சகோதரருமான, பிரபல நடிகருமான குமரகுரு கொரோனாவால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் உயிர்சேதமும் அதிகமாகியுள்ளது.
சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் தொற்றுக்கு ஆளாகி பெரும் அவஸ்தை பட்டு வருகின்றனர். அதிலும் சினிமா துறையில் பல பிரபலங்களை வாரிச் சென்றுள்ளது.
ஆம் பாண்டு, கோமகன், மாறன் உள்ளிட்ட நடிகர்களின் உயிரைப் பறித்த கொரோனா தற்போது மற்றொருவரின் நபரின் உயிரையும் பறித்துள்ளது.
பிரபல இயக்குனர் ராஜு முருகனின் சகோதரர் குமரகுரு(44) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் கற்றது தமிழ், ஜோக்கர், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்துள்ளதோடு, தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.