முதல் திருமணத்தினை மறைந்து இயக்குனரை காதலித்த சின்னத்திரை நடிகை... அடிதடி சண்டையில் முடிந்த வாக்குவாதம்
முதல் திருமணத்தை மறைத்து காதலித்து வந்த சின்னத்திரை நடிகையிடம் தகராறு செய்த உதவி இயக்குனருக்கு அடி உதை விழுந்த நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணலி பல்ஜிபாளையம் அப்பாராஜ் 2வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெனிபர் (24). சின்னத்திரை நடிகை. இவரும், வண்டலூரை சேர்ந்த சின்னத்திரை உதவி இயக்குனர் நவீன்குமார் (25) என்பவரும் கடந்த 4 மாதமாக காதலித்து வந்துள்ளனர்.
ஜெனிபருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு சரவணன் என்பவருடன் திருமணம் நடந்துள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரியுள்ளார்.
இந்நிலையில் தனது முதல் திருமணத்தினை மறைத்ததால் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் ஜெனிபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் அவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
இன்று ஜெனிபரிடம் பேச்சுவார்த்தை சென்ற நவீன்குமார், அங்கும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, கைகலப்பும் ஏற்பட்டுள்ளது.
குறித்த நடிகையின் தந்தை பெரியநாயகத்தின் நண்பர், நவீன்குமாரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த நவீன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுபற்றி நவீன்குமார் தனது தந்தை உதயமாருக்கு போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து உதயகுமார், அவரது மனைவி, நவீன்குமாரின் நண்பர் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ஜெனிபர் வீட்டுக்கு சென்று நவீன்குமாரை எப்படி அடிக்கலாம் என கேட்டுள்ளனர். அப்போது, ஏற்பட்ட வாக்குவாத்தில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர்.
அங்கு நிறுத்தி வைத்திருந்த பெரியநாயகத்தின் கார், உதயகுமாரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. தடுக்க முயன்ற பெரியநாயகத்தின் வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ள நிலையில், இரண்டு தரப்பினரையும் பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.