வானம் பட இயக்குநருக்கு 2-வது திருமணம்.. Heroine போல் இருக்கும் மணமகள்- யார் இவர்?
வானம் பட இயக்குனர் கிருஷ் ஜகர்லாமுடி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் கிருஷ் ஜகர்லாமுடி
தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியாகிய “வானம்” திரைப்படத்தை இயக்கியவர் தான் இயக்குநர் கிருஷ் ஜகர்லாமுடி.
இவர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களை இயக்கி உள்ளார்.
குறைந்தளவு படங்களை இயக்கியிருந்தாலும் திரைப்படங்கள் எடுக்கும் பொழுது சிறு விடயங்களை கூட நுனுக்கமாக கவனிக்க கூடியவர் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
இயக்குநர் கிருஷ் ஜகர்லாமுடி கடந்த 2016 ஆம் ஆண்டு “ரம்யா” என்கிற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் இயக்குநருக்கு நடிகை ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறி இரண்டு வருடங்களில் இவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
2 ஆவது திருமணம்
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை “பிரீத்தி சல்லா” என்ற மருத்துவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இயக்குநரின் இரண்டாவது மனைவி ஹைதராபாத்தை சேர்ந்தவர், இவருக்கும் முதல் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது என்றும் மருத்துவருக்கு தற்போது 11 வயதில் மகன் ஒருவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து கிருஷ் ஜகர்லாமுடி-பிரீத்தி சல்லா திருமணம் ஞாயிற்றுகிழமை முடிந்த நிலையில், எதிர்வரும் 16 ஆம் திகதி திருமண வரவேற்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |