மூளைச்சாவு அடைந்த பிரபல இயக்குனர் சிகிச்சை பலனின்றி மரணம்? தீயாய் பரவும் தகவலுக்கு முற்றுப்புள்ளி
பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மையல்ல என தெரியவந்துள்ளது. தேசிய விருது பெற்ற 'இயற்கை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். 'ஈ', 'பேராண்மை' படங்கள் மூலம் தன்னை தனித்துவமான இயக்குநராக நிறுவியர்.
இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. நேற்று மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இயக்குநர் ஜனநாதனின் உடல்நிலை குறித்து, நேரில் சென்று நடிகர் விஜய சேதுபதி, இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன் விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இயக்குனர் அமீர் "மரியாதைக்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடக நண்பர்களுக்கு, அன்பும் அறிவும் நிறைந்த அண்ணன் இயக்குநர் SP ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எனவே உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.