பிரம்மாண்டமாக நடந்த சேரன் மகள் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
இயக்குனர் சேரன் மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இயக்குனர் சேரன்
மதுரையில் பிறந்த இயக்குனர் சேரன் சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான புரியாத புதிர் திரைப்படத்தில் முதன்முறையாக உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சில படங்களில் உதவி இயக்குனராக இருந்த இவர் கமல்ஹாசனுடன் இணைந்தும் உதவி இயக்குனராக மகாநதி படத்தில் பணியாற்றியுள்ளார்.
பின்பு பாரதி கண்ணம்மா படத்தினை இயக்கி பெரும் வரவேற்பை பெற்றார். பின்பு சமூகத்தில் நடக்கும் அவலங்களை குளறித்து பல படங்களை இயக்கியுள்ளார்.
குறிப்பாக இவர் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் தேசிய விருதை பெற்று தந்துள்ளது. தற்போது நடிப்பில் மட்டுமு் கவனம் செலுத்தும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார்.
மகளின் திருமணம்
சேரனின் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் - சுரேஷ் ஆதித்யா என்கிற தொழிலதிபருக்கும் சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ள நிலையில், சேரன் வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நேற்று நடந்த என் மகளின் திருமணத்தில் எனது பலமாய் நின்று காலையில் இருந்து மாலை வரை அனைத்து வேலைகளையும் சந்தோசமாய் பார்த்து வருகை தந்த அனைவரையும் மகிழ்வாய் அனுப்பிவைத்த என்னுடன் பணிபுரிந்த என் தம்பிகள் (இயக்குனர் ஆனவர்களும் வருங்கால இயக்குனர்களும்) அனைவருக்கும் நன்றி.. என கூறி புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |