கேப்டன் மரணத்தால் தள்ளிப்போன ப்ரொமோ... தற்போது அதிரடியாக வெளியிட்ட சேரன்
கேப்டன் மறைவையோட்டி சேரனின் திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் தாமதமாக வெளியாகியுள்ளது.
விஜயகாந்த் மறைவு
தமிழ் சினிமாவின் மூத்த நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி காலமானார்.
இதனை தொடர்ந்து பெரும் திரளான மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் கேப்டனின் வீட்டை சுற்றி திரண்டியிருந்தனர்.
பின்னர் ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு நேற்றைய தினம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெப் சீரிஸின் ப்ரோமோ
இந்த நிலையில் கேப்டன் மறைவு ஏற்பட்ட காரணத்தினால் சேரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸின் ப்ரோமோ தாமதமாக வெளியாகியிருக்கிறது.
இந்த வெப் சீரிஸில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், திவ்யபாரதி, கலையரசன், காஷ்யப் பார்பையா என பலர் நடித்திருக்கிறார்கள்.
இயக்குநராகவும், நடிகருமாகவும் தேசிய விருதுகளை வென்ற சேரன் ஓடிடியில் களமிறங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
28ம் தேதி அறிவிப்பதாக இருந்த எனது அடுத்த இயக்கத்தின் முன்னோட்டம் கேப்டன் அவர்களின் மறைவையொட்டி தள்ளிவைக்கப்பட்டது.. அந்த உருவாக்கத்தின் முன்னோட்டம் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கே வெளியிடப்படும்... நன்றி
— Cheran (@directorcheran) December 30, 2023
அந்த வகையில், சமீபத்தில் அவர் நடித்த வெளியான “தமிழ் குடிமகன்” திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்ற நிலையில், இந்த சீரியஸுக்கும் மக்கள் அலாதியான ஆதரவை கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Hi friends its my OTT web series teaser. Watch now.
— Cheran (@directorcheran) December 30, 2023
Cheran's Journey Streaming on Jan 12th on @SonyLIV #SonyLIV #CheransJourney@directorcheran @eka_dop @CSathyaOfficial @realsarathkumar @prasanna_actor @Aariarujunan @divyabarti2801 @kalaiactor @YoursKashyap pic.twitter.com/ycHoNCmSo6
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |