எஸ்.ஏ.சியின் அன்பு முத்தங்களுக்காக காத்திருந்த பிரபலம்: மகிழ்ச்சியில் திளைத்த நடிகர்
தமிழ்த்திரையுலகினரை நடிப்பால் ஆட்கொண்ட நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்து அன்பு முத்தங்களை பகிர்ந்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தங்களில் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் கெப்டன் என்ற அந்தஸ்த்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டுமல்ல அரசியல்வாதியாகவும் மக்களுக்கு சேவையாற்றியவர்.
ஒரு நடிகராகவும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரு மகத்தான மனிதராகவும் மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கிறார். இவர் இனிக்கும் இனிமை என்ற திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார்.
அதற்குப் பிறகு தனது வித்தியாசமான நடிப்பாலும், கதாப்பாத்திரத்தாலும் மக்களை இவர் பக்கம் கட்டிப்போட்டுக்கொண்டார். மேலும், இவரின் திரைப்படங்கள் எல்லாம் அப்போது மட்டுமல்லாமல் இன்றும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
2015ஆம் ஆண்டு சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்கினார்.
இவர் தற்போது உடல்நலக் குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இவர் தனது 33ஆவது திருமண நாளை நேற்று கொண்டாடி இருக்கிறார்.
இந்தக் கொண்டாட்டப்புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சந்திரசேகர் சந்திப்பு
இந்நிலையில், விஜயகாந்தை மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நேரில் சந்தித்துள்ளார்.
அவர்கள் அன்புடன் பேசி முத்தம் கொடுத்த படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும், இவர்கள் அந்தக்காலத்தில் கூட்டணியில் செந்தூரப்பாண்டி, வெற்றி, ராஜதுரை, நீதியின் மறுபக்கம், சாட்சி, புதுயுகம், ஓம் சக்தி உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.