திடீரென வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இயக்குனர் பாரதிராஜா! பிரச்சினை தான் என்ன?
இயக்குனர் பாரதிராஜா சென்னை தியாகராயர் நகர் தனியார் மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா
தமிழின் புகழ்பெற்ற இயக்குநரான பாரதிராஜா தற்போது முழு நேர நடிகராக மாறி குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தவாக பாரதிராஜா நடித்து அசத்திய நிலையில், இவர் பேசும் வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மருத்துவமனையில் பாரதிராஜா
கடந்த 24ஆம் தேதி பாரதிராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து தியாகராயர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் விரைவில் குணமடைய நடிகை ராதிகா வெளிநாட்டில் பிரார்த்தையும் செய்தார். மேலும் பல பிரபலங்கள் இவரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர்.
தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, தற்போது சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட உள்ள நிலையில், அஜீரணக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.