பிறந்தநாளில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு என்ன நடந்தது? மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
பிறந்தநாளில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
எனினும், அவருக்கு பயப்படும் அளவுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும், லேசான உடல் நலச் சோர்வு தான் என்றும் 4 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுத்த பின்னர் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மதுரை சென்று விட்டு சென்னை திரும்பும் போதும், பாரதிராஜாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த பின்னர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மிக விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதேவேளை, இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் சீனியர் திருச்சிற்றம்பலமாக தனுஷுக்கு தாத்தாவாக பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளார் பாரதிராஜா.