முதன்முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அட்லி: வைரலாகும் க்யூட் போட்டோ
ஜவான் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த அட்லி தற்போது முதன்முறையாக குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இயக்குனர் அட்லி
தமிழ் திரையுலகில் இரண்டு மூன்று படங்களிலேயே இயக்கி பிரபல்யமானவர் அட்லி. முதல்முறையாக ராஜா ராணி என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்திருந்தார்.
முதல் படத்தையே ஹிட் படமாக கொடுத்ததால் அடுத்த படத்தை விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார். அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லாம் வெற்றியைக் கொடுத்து வந்தது.
தற்போது பொலிவூட் சூப்பர் ஸ்டார் சாருக்கான், நயன்தாராவை வைத்து ஜவான் என்றப் படத்தை இயக்கி இன்று வெளியிட்டிருக்கிறார்.
குழந்தையின் புகைப்படம்
அட்லி 2014ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்த கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தைக்கு மீர் என்றப் பெயரையும் வைத்திருந்தார்கள்.
இந்நிலையில், ஜவான் படப்பிடிப்பில் படும் பிஸியாக இருந்த அட்லி தற்போது அவர் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |