8 வருடங்களுக்கு பின்னர் அப்பாவான அட்லி! என்ன குழந்தை தெரியுமா? வைரலாகும் டுவிட்டர் பதிவு
திருமணம் முடித்து சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அழகிய ஆண்குழந்தைக்கு தந்தையான அட்லி, தனது சந்தோசத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
சினிமாவில் இயக்குநராக அறிமுகம்
சினிமாவில் ஒரு இயக்குநராக வருவதற்கு முன்னர் பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்தார்.
இவர் சினிமா மீதுக் கொண்டுள்ள அதீத அன்பினாலும், ஆர்வத்தினாலும் தனிதிறமைக் கொண்டு ஆர்யா, நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து “ராஜா ராணி” என்ற காதல் படத்தை இயக்கினார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் இயக்குநர் அட்லிக்கு ஒரு நல்ல ரீச்சை எடுத்துக் கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயை வைத்து தெறி,மெர்சல்,பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கு தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்றே கூற வேண்டும்.
காதல் திருமணம்
இந்த நிலையில் இவர் தன்னுடை முதல் திரைப்படமான ராஜா ராணி வெளியான பின்னரே தன்னுடைய காதலி விஷ்னு ப்ரியாவை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களின் திருமணம் நடந்து சுமார் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இவர்களுடைய திருமண நாளை கொண்டாடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவ்வாக இருக்கும் அட்லி, கடந்த சில மாதங்களுக்கு மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் வெளியுலகிற்கு தெரிவித்திருந்தார்.
ஆண்குழந்தைக்கு அப்பாவான அட்லி
இதன்படி, நேற்றைய தினம் அட்லிக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த பல பிரபலங்கள் இவருக்னு வாழ்த்துகள் தெரிவித்ததுடன் முதல் குழந்தையே ஆண் குழந்தையா? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Atlee & Priya are blessed with a Baby Boy :) congrats ♥️ pic.twitter.com/jt4P8QiafV
— AB George (@AbGeorge_) January 31, 2023