விருதுகளை குவித்த பசி திரைப்பட இயக்குநர் துரை திடீர் மரணம்... சோகத்தில் திரையுலகம்
தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பசி திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
இயக்குநர் துரை
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக விளங்கியவர் இயக்குநர் துரை.
இவர் இயக்கிய அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.
பசி திரைப்படம்
1979 ம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘பசி’. சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு கொண்டு இத்திரைப்படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது.
சிறந்த இயக்குனர், திரைப்படம், சிறந்த நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த எதார்த்த திரைப்படம்.
ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்த திரைப்படத்தின் இயக்குனர் துரை, ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குநர் துரை இன்று காலமானார். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
தொடர்ச்சியாக இடம்பெரும் சினிமா பிரபலங்களின் மறைவுக்கு மத்தியில் இவரின் திடீர் இழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |