காதலியை கரம் பிடித்த இயக்குநர்- திரண்டு வந்து வாழ்த்திய திரையுலகம்
இயக்குநர் அஜய் ஞானமுத்து திருமண படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அஜய் ஞானமுத்து
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குநர்களில் ஒருவர் தான் அஜய் ஞானமுத்து.
இவர், இயக்கத்தில் வெளியாகிய டிமான்ட்டி காலணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தந்தது. சுமாராக 12 வருடங்களுக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றி நடைப் போட்டது.
இதனை தொடர்ந்து கோப்ரா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் இயக்கியிருந்தார். இந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவு வசூல் ஆனது.
இப்படி தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு ஏற்ப தன்னுடைய கதையை வித்தியாசமாக கொடுக்கும் இயக்குநராக பார்க்கப்படுகிறார்.
திருமண படங்கள்
இந்த நிலையில், அஜய் ஞானமுத்து கடந்த 19ஆம் தேதி, நீண்ட நாள் காதலியான ஷிமோனாவை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவரின் மனைவி கிராஃபிக் டிசைனர் என்றும் கூறப்படுகின்றது.
இவர்களின் திருமணத்தில் டிமான்ட்டி காலணி படக்குழுவினரான அருள்நிதி, பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அதே சமயம், அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நடிகர் விக்ரம், அதர்வா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆதிக் ரவிச்சந்திரன், மகிழ் திருமேனி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |