பிக்பாஸ் முத்துக்குமரன் ரசிகர்களுக்காக வெளியிட்ட முதல் காணொளி
பிக்பாஸ் முத்துகுமரன் வெளியிட்ட முதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அந்த வகையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிக்பாஸ் சீசன் 8 சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனிலில் டைட்டில் வின்னராக முத்துகுமரன் தெரிவு செய்யப்பட்டார்.
பிக்பாஸ் சீசன் 8 கிராண்ட் பினாலேவில் சௌந்தர்யா, முத்துக்குமரன் இருவரும் அருகருகே நின்றுகொண்டிருக்க முத்துக்குமரனின் கையை உயர்த்தியப்படி டைட்டில் வின்னர் இவர் தான் என விஜய் சேதுபதி அறிவித்தார்.
முத்துகுமரன் வெளியிட்ட முதல் காணொளி
இந்த நிலையில், பிக்பாஸ் கோப்பையை வென்ற முத்துகுமரன் மேடையில் தனது குடும்பத்தினருடன் இணைந்து அவருடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். இருந்தாலும் அவரின் நன்றி காட்ட இன்னொரு காணொளியையும் வெளியேறிய பின்னர் பகிர்ந்துள்ளார்.
அதில்,“ எனக்கு இவ்வளவு அன்பு கொடுக்கும் உங்கள் அணைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. வெளியில் வந்து பார்த்த பின்னர் தான் நீங்கள் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்று புரிந்தது. மிகப் பெரிய பொறுப்பு ஒன்று உள்ளது போன்று உள்ளது...” என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.
இவரின் காணொளியை முத்துகுமரனின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
நன்றி உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி ❤️🙏🏼 pic.twitter.com/laipHIbFHa
— Naan Muthukumaran (@kumaran_kural) January 20, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |