இட்லி, தோசைக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்து பாருங்க!
இட்லி தோசைக்கு அட்டகாசமான சுவையில் குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாக இட்லி, தோசை செய்தாலே அதற்கு சாம்பார், சட்னி தான் வைத்து பலரும் சாப்பிட்டிருப்பார்கள். இவ்வாறு பெரும்பாலான நாட்களில் சாப்பிடுவதால் முகம்சுழிக்கவும் வைக்கும்.
இதற்கு இட்லி, தோசைக்கு சுவையான குருமா எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
குருமா செய்ய தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு:
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 6 பல்
இஞ்சி - 3 துண்டு
சோம்பு - 1 ஸ்பூன்
தேங்காய் - 1/4 மூடி ( துருவியது)
முந்திரி (அ) பொட்டுக்கடலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
குருமா செய்வதற்கு..
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 5
அன்னாசிப் பூ - 1
கல்பாசி - சிறிது
பிரியாணி இலை - 2
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைகேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து கொஞ்சமாக அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு இவற்றினை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு துருவிய தேங்காய் மற்றும் முந்திரி அல்லது பொட்டுக்கடலை சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து மிக்ஸியில் மென்மையாக அரைத்து கொள்ளவும்.
இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் எடுத்து வைத்த பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ கல்பாசி பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
இதனுடன் தக்காளி மற்றும் உங்கள் தேவைக்கேற்ப உறுப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள். தக்காளி நன்கு மென்மையாக வந்த பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறுங்கள்.
பிறகு அரைத்து வைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். மசாலாவில் பச்சை வாசனை போன பிறகு அதில் பொடியாக நறுக்கி கொத்தமல்லியை தூவி இறக்கினால் இட்லி தோசைக்கு அட்டகாசமான சுவையில் குருமா ரெடி!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |