அஸ்வின், மோர்கன் இடையே மோதல் ஏற்பட்டது ஏன்? ஆக்ரோஷத்திற்கு காரணம் இவரா? உண்மையை விளக்கிய தினேஷ் கார்த்திக்!
ஐபிஎல் கிரிக்கெட் எப்பொழுது வந்ததோ அப்போது இருந்தே ஜென்டில்மேன் கலாச்சாரம் மறந்துவிட்டது. வெற்றிக்காக பல வீரர்கள் சில சர்ச்சையான விஷயங்களை செய்கின்றனர். ஆனாலும் ஒரு சிலர் வீரர்களின் செயல்பாடுகள் ரசிக்கும்படியாக வெளியாகி வைரலாவதும் உண்டு.
இந்த நிலையில், கடந்த நாளில் நடைப்பெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணி இடையேயான போட்டி தான் வைரலாக பேசப்பட்டு வருகிறது. காரணம், அந்த போட்டியில் அஷ்வின் மோர்கன் இடையே ஏற்பட்ட சண்டை தான்.
இந்த சம்பவத்திம் வீடியோ வைரலாக அதற்கு என்ன காரணம் என தற்போது வெளியாகி இருக்கிறது. ராகுல் திரிபாதியின் த்ரோ ஒன்று ரிஷப் பந்த் மேல் பட்டு செல்ல அதற்கு ஒரு ரன்னை கூடுதலாக ஓட ரவிச்சந்திரன் அஸ்வின் தான் ரிஷப் பந்த்தை ரன்னுக்கு அழைத்தார்.
இது மோர்கனுக்குப் பிடிக்கவில்லை, ஆனால் மோர்கனே இப்படித்தானே உலகக்கோப்பையை வென்றார்!! அதனால் அவருக்கு இதைச் சொல்ல உரிமை கிடையாது என்று கூட அஸ்வின் கருதியிருக்கலாம்.
அதனால் களத்தில் வாக்குவாதம் ஏற்பட தினேஷ் கார்த்திக் விலக்கி விட்டார். இச்சம்பவம் பற்றி தினேஷ் கார்த்தி தெரிவிக்கையில், ராகுல் திரிபாதி பந்தை த்ரோ செய்தார், பந்து மேலே பட்டு வெளியே சிறிது தூரம் சென்றது, ரவிச்சந்திரன் ஒரு ரன்னுக்கு அழைத்தார்.
மோர்கன் இதை விரும்பவில்லை, அதுதான் பிரச்சினை. ஸ்பிரிடி ஆஃப் கிரிக்கெட்டின் படி பேட்ஸ்மென்கள் மேல் பந்து பட்டு செல்லும் போது அதற்கு ரன் ஓடுவது கூடாது என்று நினைப்பவராக மோர்கன் இருக்கலாம்.
இது ஒரு சுவாரஸியமான டாபிக்தான். எனக்கும் இது தொடர்பாக தனிப்பட்ட கருத்து உள்ளது, அது இப்போது தேவையில்லை, ஆனால் இப்போதைக்கு இந்த விவகாரத்தில் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்றார் தினேஷ் கார்த்திக்.
மேலும், அஸ்வின் பந்து வீச்சு முறையும், அவரது பாடி லாங்குவேஜும் ஒரு சகிப்புத்தன்மையற்ற நிலைக்குச் சென்றதற்கு விராட் கோலி இங்கிலாந்தில் அவரை அணியில் தேர்வு செய்யாமல் இருந்ததும் அதற்கு கூறிய காரணங்களும் சேர்ந்து காரணமாகியிருக்கலாம் என ஒரு விவாதம் சென்றுகொண்டிருக்கிறது.