முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செங்கோலை வாங்கிய தளபதி விஜய்! கடும் பரபரப்பை கிளப்பிய சுவரொட்டி... ஷாக்கில் ரசிகர்கள்
நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ஓட்டியுள்ள சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜயின் 47வது பிறந்த நாள் வரும் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் விஜயின் பிறந்தநாளை கொண்டாட ஒருசில ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி நடிகர் விஜய் தொடர்பான அரசியல் சர்ச்சையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கோலை வழங்குவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ள அந்த சுவரொட்டியில் பின்னணியில் தலைமை செயலகமும் இடம் பெற்றுள்ளது.
மேலும், ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சியை வழங்கிட தம்பி வா, தலைமை ஏற்க என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
திண்டுக்கல் மணிக்கூண்டு இளைஞரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி விஜய் ரசிகர்கள் மற்றும் திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.