பிரியாணிக்குப் பெயர் போன திண்டுக்கல் தலபாக்கட்டி பிரியாணி இனி வீட்டிலேயே செய்யலாம்
உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு வகையான உணவுகள், பாரம்பரிய உணவுகள் என பலவாறு இருந்தாலும் பிரியாணி என்றால் பலருக்கு வாயில் எச்சில் ஊறும்.
பிரியாணியில் ஐதராபாத் பிரியாணி, லக்னோ பிரியாணி மற்றும் கொல்கத்தா பிரியாணி என பலவகைகளில் உள்ளது. அதிலும் இந்த தலப்பாக்கட்டி பிரியாணி என்று சொன்னாலே நாவில் எச்சூறும். அப்படி எச்சூற வைக்கும் தலப்பாக்கட்டி பிரியாணியை கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்யலாம் தலப்பாக்கட்டி பிரியாணி. ரெசிபி இதோ,
தேவையான பொருட்கள்
- தனியா
- சிறுதுண்டு பட்டை
- இஞ்சி பூண்டு விழுது
- கிராம்பு
- மிளகு
- ஏலக்காய்
- பிரியாணி இலை
- பச்சை மிளகாய்
- நெய்
- எண்ணெய்
- நட்சத்திர பட்டை
- சோம்பு
- சீரகம்
- அரைக்கிலோ சீரக சம்பா
- ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம்
- ஒரு கிலோ சிக்கன்
- ஒரு கப் தயிர்
- உப்பு
- தக்காளி
- ஸ்பூன் மிளகாய்த்தூள்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் கிராம்பு ஏலக்காய் பட்டை அண்ணாசிலை ஒரு கரண்டி சீரகம், ஒரு கரண்டி சோம்பு, தனியா, மிளகு, நட்சத்திர பட்டை ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் நெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்பு அதில் அரைத்து வைத்த வெங்காயம் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ளவும்
அதன் பிறகு அரைத்து வைத்த பிரியாணி மசாலாவையும் அதனோடு ஒரு ஸ்பூன் மிளகாய் தூளையும்சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ளவும்
பின்பு அதில் மஞ்சள் தூள் போட்டு கழுவி வைத்த சிக்கனை சேர்த்து கொள்ளவும் பின்பு அதில் ஒரு கப் தயிர் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும் அதன் பிறகு அரை மணி நேரம் ஊற வைத்த சீரக சம்பா அரிசியை சேர்த்துக் கொள்ளவும் அதனோடு ஒரு கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும்.
ஒரு கொதி வந்தவுடன் தட்டை வைத்து 10 நிமிடம் மூடி வைக்கவும் அதன்பிறகு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு பெரிய கடாய் அல்லது கனமான பாத்திரத்தை மேலே வைத்து தம் போடவும் சுவையான தலப்பாகட்டி பிரியாணி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |