வாரிசு தமிழ் படமா? விஜய்க்கு பதிலாக நடிக்கவிருந்தது யார் தெரியுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய பிரபலங்களின் படங்கள் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்காவிட்டாலும் அடுத்த மாதம் 12 திகதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வெளியாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அஜித் திரைப்படத்தை விட விஜய் படத்திற்கு தமிழ்நாட்டில் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசப்போவதாக வாரிசு படத் தயாரிப்பாளர் தில் ராஜு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் பல்வேறு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பல விதமான விமர்சனங்களை பெற்றுள்ளது.
இவருக்கு பதிலாக விஜய்
வாரிசு படம் முதலில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடம் இயக்குநர் வம்சி கதை சொல்லியுள்ளார். மகேஷ்பாபுவின் கால்ஷீட் கிடைக்காமல் போக அடுத்ததாக ராம்சரணிடம் கேட்டிருக்கிறார்.
அவரும் பிஸியானதால் விஜய்யிடம் விஜய்யிடம் கதை சொல்லும்படி வம்சியிடம் தில் ராஜு கூறியிருக்கிறார் இவ்வாறு தான் வாரிசு படம் விஜய்யிடம் வந்திருக்கிறது.
அந்த வகையில், வாரிசு படம் முழு முதற் தமிழ் படமாக இருந்திருந்தால் ஏன் வாரசுடு படத்துக்காக மகேஷ் பாபு மற்றும் ராம்சரணை நாடியிருக்க வேண்டும்.
தில் ராஜு சொன்னது பொய்யா அல்லது இயக்குநர் வம்சி கூறியது பொய்யா? இல்லை படத்தின் புரோமோஷனுக்காக இப்படி இயக்குநரும், தயாரிப்பாளரும் மாறி மாறி பேசுகிறார்களா? என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.