டிஜிட்டல் தங்கம் வாங்கலாமா? லாபத்தை அள்ளுவது எப்படி?
பொதுவாகவே பெண்களுக்கு தங்கத்தின் மீதான ஈடுபாடு அதிகம் உண்டு, பெண் குழந்தை பிறந்ததுமே எதிர்காலத்திற்காக தங்கத்தை சேமிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
சிறுக சிறுக பணத்தை சேமித்து அல்லது தங்கநகை சீட்டாக குடும்பத்தலைவிகள் தங்கத்தை வாங்குவதே பலரது வழக்கமாகவும் இருக்கிறது.
இந்நிலையில் தற்போது டிஜிட்டல் தங்கத்தின் மீது ஆசை பலருக்கும் வந்துவிட்டது எனலாம், உலோகமாக அல்லாமல் டிஜிட்டல் முறையில் தங்கத்தை சேமிக்கத் தொடங்கிவிட்டனர்.
இதுபற்றி மேலும் தெளிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தங்கத்தின் மதிப்பு என்னவோ அதை மதிப்பையே டிஜிட்டல் தங்கமும் கொண்டிருக்கும், ஒன்லைன் தரகர்கள், வங்கிகள் மற்றும் தங்க விற்பனையாளர்களிடம் இருந்து டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும்.
டிஜிட்டல் தங்கத்தை பரிமாற்றம் செய்தும் கொள்ளலாம் அல்லது சேமித்தும் வைத்திருக்க முடியும்.
டிஜிட்டல் பணபரிவர்த்தனைகள் மூலமாக இவாலட்களில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம், உங்களிடம் இருக்கும் தொகையை கொண்டு டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம்.
அதிக பணமோ, நேரமோ தேவைப்படாது, குறைந்தபட்ச தொகையே போதுமானது.
இன்னும் எளிதாக சொல்லப்போனால் விலை குறைந்தபோது தங்கத்தை வாங்கிக்கொண்டு விலை அதிகமாக இருக்கும் போது விற்கலாம்.
முக்கியமாக தங்கம் வாங்கிய 24 மணிநேரம் கழித்தே அதனை விற்க முடியும், உங்களது தங்கத்தை Safe Lockமூலம் பத்திரப்படுத்தலாம், ஆனால் அதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இதனை உலோகமாக மாற்ற நினைத்தால், இடைத்தரகர்களுக்கு சேவைக்கட்டணம் அளிக்க வேண்டும், பணமாக பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.