ஒரு ரூபாயில் தங்கம் வாங்குவது எப்படி? இனி அந்த கவலையே இல்லை! மகிழ்ச்சியில் மக்கள்
தங்கம் விலையானது அடிக்கடி ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், மக்கள் பலரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் , பொதுமக்கள் பண்டிகை தினத்தில் தங்கம் வாங்கினால் நல்ல லாபம் தரும் என ஆவலுடன் வாங்க முற்படுவார்கள்.
இதனிடையே, ஒரு ரூபாய்க்கு எப்படி தங்கத்தின் மீது முதலீடு செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம். தங்கத்தில் முதலீடு செய்ய எவ்வளவோ வசதிகள் இருந்தாலும், தற்போது டிஜிட்டல் தங்கம் வாங்கும் முறை தான் ட்ரெண்டாகி வருகிறது.
அதிலும், போன் பே(phone pe), பேடி எம்(paytm), கூகுள் பே(google pay) போன்ற ஆப்கள் மூலமும் டிஜிட்டல் தங்கத்தை வாங்க முடியும். 24 கேரட் தூய தங்கதையும் கூட இந்த ஆப்கள் மூலம் வாங்க முடியும்.
ஒரு சவரன், ஒரு கிராமில் இருந்து ஒரு ரூபாய்க்கு தங்க வாங்க முடியும் என்பது தான் ஆச்சரியம். 5 ரூபாய்க்கு தங்கம் நீங்கள் வாங்கினால் 0.9 மில்லிகிராம் தங்கம் வழங்கப்படுகிறதாம்.
அப்படி நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு வாங்குகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் தங்கம் இலவசமாக லாக்கரில் சேமித்து வைக்கப்படுகிறது. தங்கத்தின் மீதான ஏற்றம் இறக்கத்திற்கான தகவல்களை ஆப்பிலே பார்த்துக்கொள்ள முடியுமாம்.
விற்பனையை கூட ஆப்பிலேயே செய்துவிடலாம். அதற்கான முழு பணம் உங்கள் வங்கி கணக்கிற்கே வந்துவிடும்.
டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் போது அதற்கான ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டி இருக்கும். கூடுதலாக இன்சூரன்ஸ் கட்டணமும் வசூலிக்கப்படும். இதற்கு டெலிவரி வசதியும் உண்டு.