அறிமுகமாகியுள்ள டிஜிட்டல் நாணயம்! எப்படி பயன்படுத்த வேண்டும்?
இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய வங்கி டிஜிட்டல் நாணயத்தை (CBDC) சோதனை முறையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் நாணயங்கள்
Digital Codeகள் உருவாக்கப்படும் நாணயத்தை, டிஜிட்டர் கரன்சி அல்லது டிஜிட்டல் நாணயங்கள் என்று அழைக்கிறோம்.
நாம் தினசரி காகித வடிவில், உலோக வடிவில் பயன்படுத்தப்படும் பணத்திற்கு சமமாக டிஜிட்டல் நாணயங்களும் மதிக்கப்படுகிறது.
இதனை ஒருசில நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ள நிலையில், ரூபாய்க்கு இணையான டிஜிட்டல் நாணயங்களை ரிசர்வ் வங்கி வெளியிடும் என 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன்படி இன்று சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
எந்தெந்த வங்கிகளில் பயன்படுத்தலாம்?
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, எச்எஸ்பிசி வங்கி என 9 வங்கிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
மக்களுக்கும், வங்கிகளுக்கும் டிஜிட்டல் நாணயங்களை பயன்படுத்துவது குறித்து விளக்க ”கான்செப்ட் நோட்”டை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகளுக்கு இவற்றை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு வரும் என்றும், கருப்பு பணத்தை இதன் மூலம் ஒழிக்க முடியும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.