10 வகுப்பு மாணவன் அடித்த DIGITAL BIT! கையும் களவுமாக சிக்கியது எப்படி?
இந்திய மாநிலம் ஹரியானாவில் 10ம் வகுப்பு மாணவன் ஒருவன் தேர்வில் வித்தியாசமான முறையில் பிட் அடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹரியானாவின் FATEHABAD பூதான் கலா கிராமத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆங்கில வாரியத் தேர்வின் போது, கண்ணாடி பதிக்கப்பட்ட தேர்வு எழுதும் அட்டையின் நடுவே மொபைல் போனை வைத்து பிட் அடித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுவன் கண்ணாடி கிளிப்போர்டு மற்றும் மொபைல்போனுடன் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான். கைபேசியை சோதனை செய்ததில், மோசடி தடுப்புப் பிரிவினர், தாளில் உள்ள கேள்விகளுக்கான பதில்களைக் கைபேசியில் வைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.
குறித்த மாணவன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மொபைல் போனையும் கைப்பற்றியுள்ளனர்.