இறந்த முதியவருடன் புதைக்கப்பட்ட 1.5 கோடி ருபாய் கார்... இதற்கு காரணம் என்ன?
சீனாவில் இறந்த முதியவருடன் 1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் கார் புதைக்கப்ப்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மறித்த முதியவர்
உலகமெங்கும் மரணம் என்பது இயற்கையான ஒன்றாக பார்க்கப்பட்டாலும் மரணத்தோடு சேர்ந்து நடக்கும் சில சம்பவங்கள் அந்த மரணத்தை பேசு பொருளாக மாற்றிவிடும்.
அப்படி சீனாவில் நடந்த ஒரு சம்பவம் பேசு பொருளாக மாறியிருக்கிறது. பொதுவாக பலருக்கும் உயிர் இல்லாத பொருட்கள் என கருதப்படும் பைக், கார் அல்லது தங்கள் பயன்படுத்தும் சில பொருட்கள் மீது அலாதியான விருப்பம் இருக்கும்.

அப்படிப்பட்ட நபர் மரணம் அடைந்து விட்டால் அவரோடு சேர்ந்து அந்த பொருளையும் புதைக்கும் பழக்கம் வெளிநாடுகளில் அவ்வப்போது நடப்பதுண்டு.
அப்படித்தான் சீனாவில் 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மிகவும் விருப்பமான 1.5 கோடி மதிப்புள்ள Mercedes Benz S450L காரை அவர் கருகிலேயே அவர் குடும்பத்தினர் புதைத்தனர்.

ஆடம்பர கார்களை சேகரிக்கும் பழக்கம் கொண்ட அந்த முதியவரின் ஆன்மாவை சந்தோஷப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்ததாக அவர் குடும்பத்தினர் கூறிய நிலையில் அனுமதி இன்றி காரை புதைத்ததற்காக சீன அரசு அந்த குடும்பத்தினருக்கு அபராதம் விதித்திருக்கிறது.
இது தொடங்கின புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |