இது எல்லாம் ஒரு வேலையா? நல்ல வேலை இங்க இல்லை!... லட்ச கணக்கில் சம்பளம் வேறையா?
உலகில் காணப்படும் வித்தியாசமான தொழில்கள் இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள் என்று வேறுபாடுகள் இன்றி சரிசமமாக போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த தொழிலை பலரும் செய்து வருகின்றனர்.
இப்படியான சூழலில் சிலர் விசித்திரமான தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பலருக்கும் தெரியாத வித்தியாசமான தொழில்களும் உள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தூங்கும் தொழில்
அமெரிக்காவில் தூங்கும் தொழிலை செய்பவர்களுக்கு இலட்ச கணக்கல் சம்பளம் வழங்கப்படுகின்றதாம். ஆண்டுக்கு சுமார் 38,500 அமெரிக்க டொலர்கள் வரை செலுத்தப்படுகிறது.
இந்த வேலைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் மெத்தையில் தூங்குவதும், அந்த மெத்தை குறித்து ரிப்போர்ட் ஒன்று தருவது மட்டுமே.
இந்த வேலையில் நீங்கள் தூக்கம் தொடர்பான தயாரிப்புகளான போர்வைகள், தலையணைகள் போன்றவற்றை பரிசீலிக்க வேண்டுமாம்.

அக்குளை முகர்ந்து பார்த்தல்
இது எல்லாம் ஒரு வேலையா என்று யோசிக்கின்றீர்களா? ஆம். இந்த வேலையில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் டியோடரண்டின் நிலையை சரிபார்க்க வேண்டும்.
ஆனால் அதற்காக நீங்கள் சோதனைக்கு டியோடரண்டைப் பயன்படுத்தியவர்களின் அக்குளை முகர்ந்து பார்க்க வேண்டும்.
டியோடரண்ட் நன்றாக இருந்தால் அது ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால் டியோடரண்ட் தரமற்றதாக இருந்தால் மயக்கம்கூட ஏற்படக்கூடும்.

உடல் உறுப்பு மொடல்கள்
உடல் உறுப்பு மொடலுக்கு உடல் உறுப்புகளை மட்டுமே விரும்புகிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ஒரு விளம்பரம் அசிங்கமான காலுடன் இருக்கும் ஒரு மொடலை விரும்புகிறது என்றால், எனவே அத்தகைய நபர் இருந்தால் அவர் அந்த வேலைக்கு அமர்த்தப்படுவார்.
மேலும், ஆப்பிள்களை விற்கும் ஒரு விளம்பரத்திற்கு அழகான கையை கொண்ட ஒருவர் தேவை என்றால் அதற்கு தேவையான அழகான கை இருந்தால் அந்த வேலையை பெறலாம்.
