சீனர்கள் நூடூல்சை எத்தனை வகைகளில் சமைக்கிறார்கள் தெரியுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக வெளிநாடுகளில் சமைக்கப்படும் உணவுகளை நம்முடைய நாடுகளில் விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த வகையில் காலங்கள் மாற்றங்களுக்கு அமைய உணவு சமைக்கும் முறைகளும் அதனை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் விதமும் மாற்றமடைந்துள்ளது.
குழந்தைகள், பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் மெல்ல மென்று சாப்பிடும் உணவுகளை அதிகமாக சமைப்பார்கள்.
இதன்படி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் நூடில்ஸ்.
இந்த உணவு வகைகள் சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து , வியட்நாம் என பல நாடுகளிலும் வித்தியமான நூடுல்கள் சமைக்கப்படுகின்றன.
ஆனால் நூடுல்களின் தோற்றம் என்பது சீனாவில் தான் தொடங்கியதாக வரலாறு கூறுகிறது. நூடில்ஸை பல வகைகளில் சமைக்கலாம் என பதிவுகள் கூறுகின்றன. இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
நூடில்ஸ் வகைகளும் அதன் உருவான கதையும்
1. மி சியான்
இந்த வகை தென்மேற்கு சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் அதிகமாக சமைக்கப்படுகின்றது. இது யுன்னான் அரிசி நூடுல்ஸ் அல்லது மி சியான் எனப்படுவது வட்டமான, ஸ்பாகெட்டி போன்ற நூடுல்ஸ் ஆகும்.
இந்த வகை நூடில்ஸ்வுடன் கோழி/ பன்றி இறைச்சி , மசாலாக்கள் சேர்த்து கிராசிங் தி பிரிட்ஜ் ரைஸ் நூடுல்ஸ் என்று டிஷ் செய்யப்படுகிறது.
2. மி ஃபென்
இந்த வகை தெற்கு சீனாவில் இருந்து உருவாக்கம் பெற்றுள்ளது. அத்துடன் பார்ப்பதற்கு சேமியா போல் மெல்லிதாக இருக்கும். இதனுடன் மீன் அல்லது மாட்டிறைச்சி பந்துகளுடன் குழம்பில் வேகவைக்கப்படுகிறது.
தொடர்ந்து பிலிப்பைன்ஸில், முட்டைக்கோஸ், கேரட், காளான்கள், பட்டாணி, துண்டாக்கப்பட்ட கோழி, இறால் மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை சேர்ந்த உணவான பஞ்சிட் பிஹோன் ஆகிய உணவுகளுடன் சேர்க்கப்படுகின்றது.
3. ஹெ ஃபென்
ஹெ ஃபென் நூடில்ஸ் அரிசியால் செய்யப்படும் தடிமனாக இருக்கும், தெற்கு சீனாவின் குவாங்சூ மாகாணத்தில் உள்ள ஷாஹே என்ற நகரத்தில் தோன்றியதாக கூறப்படுகின்றது.
இந்த வகை நூடில்ஸ் பெரும்பாலும் இறைச்சி மற்றும்/அல்லது காய்கறிகளுடன் சமைக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |