viral video: கண்களை மறைக்கும் தோலை நுட்பமான முறையில் அகற்றும் பாம்பு... புல்லரிக்கும் காட்சி
பாம்பொன்று தோல் உரிக்கும் போது அதன் கண்களை மறைக்கும் தோலை நுட்பமான முறையில் அகற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பாம்புகளின் உருவத்திற்கு ஏற்ப அவற்றின் சட்டை அதாவது அதன் தோல் அமைந்திருக்கும்.
பாம்புகள் அதன் சட்டையை இயற்கையாகவே உரித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்த செயன்முறை Ecdysis அல்லது moulting என குறிப்பிடப்படுகின்றது.
பாம்பின் பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத் தடையாக மாறும்போது பாம்பின் உடல் தனது சட்டையை அகற்றத் தொடங்கும்.இதுவே பாம்பு அதன் தோலை அகற்றுவதற்கான அறிவியல் காரணம்.
அந்தவகையில் பாம்பொன்று தனது தோலை அகற்றும் செயன்முறையின் போது அதன் கண்களை மறைக்கும் தோல் பகுதியை நுட்பமாக அகற்றும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |