உங்களின் உடலமைப்பு இப்படி உள்ளதா? அப்போ உங்களுக்கு நோய் உள்ளதாம்
ஒருவரின் உடலின் வடிவத்தை வைத்தே அவருடைய குணாதிசயங்களையும் ஆளுமையையும் கூறக்கூடிய சந்தர்ப்பத்தில் எமது உடலில் எப்படிப்பட்ட நோய் வரும் என்பதையும் கூறமுடியும்.
உடல் வடிவம்
1. ஆப்பிள் போன்ற உடல் வடிவம் கொண்டவர்களுக்கு கொழுப்பு அனைத்தும் இடுப்பையும் வயிற்றையும் சுற்றியே இருக்கும். இவர்களுக்கு இடுப்பு தெரியாது.
டயட் மற்றும் முறையான உடற்பயிற்சி ஆகியவையே இவர்களின் தேவையாக காணப்படுகிறது. இவர்களுக்கு இதய நோய் மற்றும் மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது.
2. பேரிக்காய் போன்ற உடலமைப்பை கொண்டவர்களுக்கு மேல் பகுதியை விட கீழ்ப்பகுதி பெரிதாகவும் இடுப்பு அகலமாகவும் இருக்கும்.
இவர்களுக்கு செல்லுலைட் மற்றும் கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். மேலும் உங்களால் அவ்வுளவு எளிதில் உடல் எடையை குறைக்க முடியாது என்பதால் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும்.
இவர்களுக்கு உடல் கொழுப்புகள் அனைத்தும் தொடையின் மேற்பகுதியில் சேகரிக்கும்.
3. செவ்வக உடலமைப்பை கொண்டவர்களுக்கு அவ்வளவு எளிதில் உடல் எடை அதிகரிக்காது. இவர்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருப்பார்கள். இவர்களுக்கு வயிற்றுப்பகுதியில் கொழுப்புகள் சேராது.
4.தலைகீழ் முக்கோண வடிவ உடலமைப்பை கொண்டவர்களுக்கு விரிந்த தோள்களோடும் மெல்லிய இடுப்போடும் அதிக மெடபாலிஸத்தையும் கொண்டிருப்பார்கள்.
இவர்களின் உடல் எடைக்கும் உயரத்திற்குமான விகிதம் சமச்சீராக இருக்கும். அதனால்தான் இவர்கள் பார்ப்பதற்கு கட்டுமஸ்தாக தெரிவார்கள். இவர்கள் இதய நோய்கள் அல்லது எலும்பு சம்மந்தமான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.