இரவில் சுண்டல் சாலட் சாப்பிட்டால் எடை குறையுமா? நிபுணரின் பரிந்துரை
பொதுவாக எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் உணவு உட்கொள்ளும் போது மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பார்கள்.
காலை முதல் இரவு வரை எடுத்து கொள்ளும் உணவுகள் குறைவான கலோரி கொண்டதாக இருக்க வேண்டும்.
மேலும் மருத்துவரின் அறிவுரையின் படி உணவுகளை எடுத்து கொள்ளும் போது, எடை குறைந்த பின்னர் வரும் வேறு பிரச்சினைகளிலிருந்து எம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டிக் கொடுத்த நிபுணர் ஒருவர் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவு வேளைகளில் சுண்டல் சாப்பிட்டால் நல்லது என்ற கருத்தை முன் வைத்துள்ளார்.
மேலும், “ எடை குறைக்க நினைப்பவர்கள் அடர்த்தியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் வயிற்றில் இடம் இருந்தால் தான் பசியெடுக்க ஆரம்பிக்கும். இடத்தை நிரப்பும் பொழுது பசி ஏற்படுவது குறைவாக இருக்கும்.
அதே போல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் அதிகமான திரவ உணவுகளையும், கலோரிகள் நிறைந்த உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும். இப்படியான டயட்டை பின்பற்றும் பொழுது வைட்டமின்கள், கலோரிகள், புரதங்கள் சரியான அளவில் சேர்ந்து எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்."
இது போன்று டயட்டில் இருப்பவர்கள் எப்படியான உணவு பழக்கத்தில் ஈடுப்பட வேண்டும் என்பதனை விளக்கமாக கூறியிருக்கிறார்.
அப்படி என்னென்ன விடயங்களை நிபுணர் ஆழமாக கூறியிருக்கிறார் என்பதனை கீழுள்ள காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.