நினைத்த காரியம் நிறைவேறவில்லையா? ஒரு நிமிடம் இதை பாருங்க..!
சிலருக்கு நினைத்த காரியம் நிறைவேறுவது என்பது மிகவும் அரியதானதொரு விடயமாக இருக்கும்.
இதுபோன்ற பிரச்சினைகள் ஜாதக கோளாறு மற்றும் எமது நேரங்கள் சரியாக இல்லாத போது எழுகிறது. தொடர்ந்து இதனை சில பரிகாரங்கள் மூலம் சரிசெய்துக் கொள்ளலாம்.
அந்த வகையில் எந்த காரியம் செய்தாலும் திங்கட்கிழமை செய்தால் வெற்றியடையும் என்று பெரியவர்கள் கூறுவார்கள் இது பற்றிய பூரண விளக்கத்தை தொடர்ந்து பார்ப்போம்.
திங்கட்கிழமைகளில் சிவனுக்கான பாரிகாரங்கள்
பொதுவாக திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த நாள் என பார்க்கப்படுகிறது. சிவனை வழிபடும் பக்தர்கள் அன்றைய தினத்தில் விரதம் பிடிப்பார்கள். இதனால் பலன் இரட்டிப்பாக கிடைக்கும் என்பார்கள் மற்றும் புதிய வணிகங்கள் ஆரம்பிப்பவர்கள் இந்த தினங்களில் ஆரம்பிக்கலாம்.
திருமணமாகாதவர்கள், வணிகங்கள் நட்டமிட்டியவர்கள் திங்கட்கிழமை நாட்களில் விரதங்கள் இருந்து 21 வில்வம் இலைகளை எடுத்து அதில் நம்முடைய விருப்பங்களை எழுதி அதனை பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நினைத்த காரியம் நிறைவேறும் மற்றும் தீராத தோஷங்கள் தீரும்.
தீராத பிரச்சினைகளில் தத்தளிப்பவர்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் சிவனுக்கு தேங்காய் உடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளிலிருந்து விடுப்பட வேண்டும்.
திருமணமாகியும் பல நாட்கள் குழந்தை இல்லாதவர்கள் வாரம் வாரம் திங்கட்கிழமைகளில் கோதுமை மாவினால் 11 சிவலிங்கம் பொம்மைகள் செய்து அதனை 11 முறை அபிஷேகம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அதிகமான பாவச் செயல்களில் ஈடுபடுபவர்கள் எள் மற்றும் பேரிச்சம்பழம் வைத்து சிவனுக்கு படைக்கும் போது
பாவச் செயல்களிலிருந்து விடுபட முடியும்.