நடிகர் விஜய்யின் மகனா இது? படிக்கும் போதே களத்தில் இறங்கிய சஞ்சய்.... இப்போ என்ன செய்கின்றார் தெரியுமா?
நடிகர் விஜய் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு அவரது மகன் ஜான்சன் சஞ்சய்யும் விஜய் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.
சஞ்சய், தனது தந்தை விஜய்யை போல் சிறு வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமானவர்.
அப்பா விஜய்யுடன் சேர்ந்து சில படங்களில் ஹிட்டான பாடலுக்கு நடனமாடி கலக்கி உள்ளார்.
இவர் லண்டனில் டைரக்ஷன் பற்றி படித்து வருகிறார்.சஞ்சய்யிற்கு சினிமா இயக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.

இவர் டாப் ஹீரோவை வைத்து படம் இயக்க போவதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில் கையில் மைக், ஃபேக்கஸ் லைட் ஆகியவற்றுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனால் அவர் டைரக்டராக தயாராகி விட்டார் என்பது உறுதியாகி உள்ளது. அது பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.