பார்வதி, கம்ரூதின் இருவரும் பிரிந்துவிட்டார்களா? இன்ஸ்டாவால் எழுந்த கேள்வி
Parvathy, Kamrudin Break Up: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பார்வதி கம்ரூதின் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் பிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்வதி, கம்ரூதின்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சில் 9வது சீசனில் வி.ஜே.பார்வதி மற்றும் கம்ரூதின் இருவரும் போட்டியாளர்களாக உள்ளே சென்றனர்.
இருவரும் ஒரு கட்டத்தில் ரெட் கார்டு வாங்கிக் கொண்டு வெளியேறினர். ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர்.

வீட்டை விட்டு வெளியேறியும் இவர்களது காதல் தொடர்ந்து கொண்டிருந்தது. பார்வதிக்கு படவாய்ப்புகள் கிடைத்து தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கின்றார். அதே போன்று கம்ரூதினும் பிஸியாக காணப்படுகின்றார்.
இவர்களின் திருமணம் கூடிய விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்டாவில் ஏற்பட்ட மாற்றம் பெரிய கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
பார்வதி, கம்ரூதின் பிரிகின்றனரா?
இந்நிலையில் கம்ரூதின் தனது இன்ஸ்டாவில் பார்வதியை அன்ஃபாலோ செய்ததுடன், அவருடன் எடுத்த புகைப்படம் காணொளிகள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.
இதே போன்று பார்வதியும் கம்ரூதினை அன்ஃபாலோ செய்ததுடன், அவருடன் எடுத்த புகைப்படம் மற்றும் காணொளிகள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.
இருவருக்கும் என்ன பிரச்சனையாக இருக்கும்? விரிசல் ஏற்பட்டதா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் கம்ரூதின், பார்வதி தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |