கர்ப்பமாக இருக்கும் நிலையில் சமந்தா சோபிதாவை தாக்கி பேசினாரா? வைரலாகும் காணொளி
சமந்தா கர்ப்பம் காரணமாக மகப்பேறு விடுப்பு அறிவித்து தாய்மையை கொண்டாடப்போவதாக சமீபத்திய பேட்டியில் பேசியதுடன், தன்னம்பிக்கை உறவுகளில் மரியாதை குறித்து கூறிய கருத்து தனது முன்னாள் கணவனின் மனைவி ஷோபிதா துலிபாலா பேச்சுக்கு பதிலா என சர்ச்சை கிளம்பியுள்ளது.
நடிகை சமந்தா
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

சுமார் நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர், கருத்து வேறுபாடுகள் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு நாக சைத்தன்யாவுக்கும் நடிகை ஷேபிதா துலிபாலாவுக்கு திருமணம் ஆனது.
இதற்குப் பிறகு, சமந்தா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் அதிகம் பேசாமல், திரைப்படங்கள் மற்றும் தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

அதன் பின் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்து கொண்ட சமந்தா. தற்போது சமந்தா கர்ப்பமாக இருக்கும் நிலையில் வரும் டிசம்பரில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
சமந்தாா பேட்டி
இந்நிலையில், சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான'எங்கள் தங்கம்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் வசூல் ரீதியாகவும் மிரட்டிவருகின்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வெற்றி விழாவில் சமந்தா பேசிய சில கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளன.

அந்த நிகழ்வில் பேசிய சமந்தா, "கேரியரும், உறவுகளும் நம் வாழ்க்கையின் முக்கியமான பகுதிகள். ஆனால் சில நேரங்களில் உறவுகள் நம் கட்டுப்பாட்டில் இருக்காது. ஒரு உறவு சிறப்பாக அமைய இருவரின் ஒத்துழைப்பும் அவசியம். ஒரு பெண்ணாக நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், முதலில் நம்மீது நமக்கே நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஒரு மனிதராக நாமே முழுமையடைய வேண்டும். ஒரு கட்டத்தில் சரியான நபரை வாழ்க்கையில் சந்திக்கலாம். ஆனால் மற்றொருவர்தான் நம்மை முழுமையாக்க வேண்டும் என்று நினைப்பது சரியான அணுகுமுறை அல்ல. அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு உறவில் தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கும்," என்று தெரிவித்தார்.

இந்த கருத்து வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சிலர் இதை நாக சைதன்யாவின் தற்போதைய மனைவி சோபிதா கூறிய கருத்துக்கு எதிராகத்தான் சமந்தா இந்த கருத்தை கூறியிருக்கின்றார் என விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
திருமண நிகழ்வின் போது சோபிதா, "நாக சைதன்யா என்னை முழுமையாக்குகிறார்" என்று கூறியதாகவும், அதற்கு பதிலளிக்கும் விதமாக சமந்தா தற்போது பேசியிருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருனின்றது.
Mee success ni garvanga choosukune oka magaadini select chesukondi.
— cinee worldd (@Cinee_Worldd) June 24, 2026
– Actress #Samantha pic.twitter.com/A6kHjdk1T9
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |