சீரியல் நடிகர் அருனுடன் காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா...
பிக் பாஸ் அர்ச்சனா சீரியல் நடிகருடன் காதலில் இருக்கிறார் என தொடர்ந்து வந்த கிசுகிசுக்களுக்கு அமைவாக இந்த காதல் கிசுகிசுக்கள் உண்மை என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அர்ச்சனா
அர்ச்சனா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து வந்தார். அதனை தொடர்ந்து பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து டைட்டில் வின்னரானார்.
இந்த நிலையில் இவர் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகருடன் காதலில் இருக்கிறார் என தகவல்கள் வந்துகொண்டிருந்தது. தற்போது இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து சென்ற சுற்றுலாப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் அருண் மற்றும் அர்ச்சனா இருவரின் காதலும் உறுதியாகியுள்ளது. சமீபத்தில் அருண் எடுத்துகொண்ட போட்டோஷீட்டில் அர்ச்சனாவும் உடன் இருந்துள்ளார்.
இதற்கு இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட போட்டோஷூட் வீடியோ கமெண்டில் “Thanks for shooting my hero” என கூறி அர்ச்சனா போட்டோகிராபருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரின் காதல் உறுதி என தெரியவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |