விவசாய நிலத்தில் வைர கற்களா? தேடுதல் வேட்டையில் மூழ்கிய மக்கள்
ஒவ்வொரு பருவமழைககும் விவசாய வயல்களில் வைரம் கிடைக்கும் அதிசயம் அனந்தப்பூர் மற்றும் கர்னூல் எல்லை பகுதியில் நடைபெற்று வருகின்றது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வயல்நிலத்தில் வைரம்
கர்னூல் மாவட்டத்தில் உள்ள மடிகேராவில் பாசினேபள்ளியில் காரீப் பருவத்திற்கான விவசாய வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவருக்கு பெரிய வைரம் ஒன்று கிடைத்த நிலையில், அதனை இரண்டு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார்கள்.
துக்கலி, ஜொன்னகிரி, கர்னூலில் உள்ள மட்டிகெரே மற்றும் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் ஆகிய இடங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் பல ஆண்டுகளாக மழைக்காலத்தில் விலைமதிப்பற்ற கற்கள் கிடைத்து வருகின்றன.
இதனை அறிந்த மக்கள் அங்கிருக்கும் வயல் நிலங்களில் தங்கத்தினை தேடி வருகின்றார்களாம். பின்பு 2019ம் ஆண்டில் விவசாயி ஒருவர் கண்டெடுத்த வைரத்தை 60 லட்சத்திற்கு விற்றதாகவும், 2020ம் ஆண்டு இரண்டு கிராமவாசிகள் 5 மற்றும் 6 லட்சத்திற்கு வைரத்தினை விற்றதாக கூறப்படுகின்றது.
இதனால் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு, வைரங்கள் நிறைந்த கிராமங்களில் தற்காலிக கூடாரம் அமைத்துத் தங்கி மக்கள் வைரத்தினை தேடி வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் யாரும் அக்கறை காட்டாத நிலையில், இடைத்தரகர்கள் மூலம் கிடைக்கும் வைரத்தினை பேரம் பேசி விற்று விடுவதாக கூறப்படுகின்றது.