சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும் Diamond Facial- வீட்டிலேயே செய்வது எப்படி?
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி முக அழகில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
அதிலும் அழகை விரும்பாத பெண்கள் என்று யாரையும் சொல்லி விட முடியாது.
அழகிற்கு அழகு சேர்க்கும் விடயத்தில் பெண்கள் கெட்டிகாரர்களாக இருப்பார்கள். இதற்காக பல அழகு குறிப்புக்களை முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
அநேகமான பெண்கள் அழகு நிலையத்தில் தன்னிடம் இருக்கும் பணத்தை அதிகமாக செலவு செய்வார்கள். அதன் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
சில சமயங்களில் அழகுப்படுத்த தேவையான பொருட்கள் நம்முடைய பட்ஜெட்டை மீறி செலவாகலாம்.
அந்த வகையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு Diamond Facial செய்யலாம். இது தொடர்பான விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. Cleansing
தேவையான பொருட்கள்:
- பால் - 2 ஸ்பூன்
- பஞ்சு - சிறிதளவு
செய்முறை:
- தினசரி உபயோகிக்கும் Face wash அல்லது சோப்பை கொண்டு நன்றாக முகத்தை கழுவி விட வேண்டும்.
- பின்னர் பச்சை பால் அல்லது காய்ச்சி ஆற வைத்த பாலை எடுத்து நன்கு முகத்தில் தேய்க்கவும்.
- மூக்கின் மீது இருக்கும் கரும்புள்ளிகள், கண்களின் அடிப்பகுதி, மற்றும் நிறம் மாறி இருக்கும் இடங்களில் நன்கு தேய்க்கவும்.
-
இப்படி செய்தால் பால் உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்கி புது பொலிவு கொடுக்கும்.
2. Scrub
தேவையான பொருட்கள்:
- ஓட்ஸ் அல்லது கோதுமை மாவு - 2 ஸ்பூன்
- பால் - 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்
செய்முறை:
- ஓட்ஸ் அல்லது கோதுமை மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் பால் ஆகிய மூன்றையும் கலந்து கொள்ளவும்.
- இந்த கலவையை மெதுவாக முகத்தில் தடவவும்.
- பின் முகத்தை குளிர்ந்த நீரினாலோ அல்லது நீரில் நனைந்த துண்டை கொண்டோ துடைத்து விடவும்.
- இந்த கலவையை முகத்தில் போட்டு தேய்த்து விடக் கூடாது.
- வரட்சியான சருமம் என்றால் இது நல்ல பலனை கொடுக்கும்.
3. மசாஜ்
தேவையான பொருட்கள்
- தயிர் - 3 ஸ்பூன்
- பீட்ரூட் சாறு - 3 ஸ்பூன்
செய்முறை:
- தயிரை கார்ட்டன் துணியால் கட்டி அதில் இருக்கும் நீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் வடிக்கட்டிய பீட்ரூட் சாறை கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வரை நன்றாக மசாஜ் செய்யவும்.
- இந்த முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்தை பிரகாசிக்கச் செய்யும்.
4. Face Pack
தேவையான பொருட்கள்:
- சந்தனப்பொடி அல்லது கோதுமை மாவு - 2 ஸ்பூன்
- பால் - 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன்
செய்முறை
- சந்தனப்பொடி அல்லது கோதுமை மாவுடன் ரோஸ் வாட்டர் மற்றும் பால் கலந்து நன்றாக கலந்து விடவும்.
- பின்னர் முகத்தில் பூசி நன்கு உலர விடவும். காய்ந்த பின்னர் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.
- கழுவிய பின்னர் சிறிதளவு ரோஸ் வாட்டர் அல்லது பாதம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணைய் எடுத்து முகத்தில் மெதுவாக தடவிக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |