தலைமுடியை பட்டுபோல் மாற்ற பீர் மருத்துவம்.. இனி இப்படி செஞ்சி பாருங்க
பீர் என்பது இளைஞர்கள் விரும்பி குடிக்கும் மதுபான வகைகளில் ஒன்று.
இது பார்ட்டிகள் மற்றும் ஹேங்கவுட்களில் பயன்படுத்தப்படும் உற்சாக பானமாக மாத்திரம் அல்லாமல் மன அழுத்தத்தை குறைக்க உதவும் பானமாகவும் பார்க்கப்படுகின்றது.
அத்துடன் டார்க் பீர்களை குடிப்பது சரும ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது எனக் கூறப்படுகிறது. பீர் குடிப்பவர்களுக்கு தலைமுடி பிரச்சினைகள் பெரிதாக இருக்காது எனவும் கூறப்படுகின்றது.
மேலும், சில ஷாம்போக்கள் தயாரிப்பதற்கு பீரை மூலப்பொருட்களில் ஒன்றாக பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில், சேதமடைந்த தலைமுடியை பீரின் உதவியுடன் பட்டுபோல் கொண்டு வரமுடியும் எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பீருக்கும் தலைமுடிக்கும் என்ன சம்பந்தம்
1. பீர் தலைமுடியின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஷாம்போக்களில் பீர் பயன்படுத்தப்படுகின்றது. எல்லா வகையான ஷாம்போக்களிலும் இல்லாமல் சில பிராண்டுகளில் மாத்திரம் பீர் பயன்படுத்தப்படுகின்றது. இந்த ஷாம்போக்கள் பயன்படுத்துவதால் தலைமுடி மென்மையான, பளபளப்பான மற்றும் நீளமாகவும் வளரும்.
2. பீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஹாப்ஸில் சிலிக்கா இருப்பதாக கூறப்படுகிறது, இது தலைமுடியை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அத்துடன் தலைமுடிக்கு வரும் விளைவுகளை இல்லாமல் ஆக்குகின்றது.
பயன்படுத்தும் முறை
ஒரு போத்தல் பீரை எடுத்து அதனை ஒரு கிண்ணத்தில் ஊற்றி வெளியில் வைக்கவும். பின்னர் அதனை கொள்கலன்களில் ஊற்றி குளியலறையில் வைக்கவும்.
குளிக்கும் போது தலைமுடியை அலசுவதற்கு இந்த பீரை பயன்படுத்திக் கொள்ளலாம். தலைமுடியை சுத்தம் செய்வதை கடினமாக்கும் என்பதால், பிளாட் பீரால் மட்டுமே முடி கழுவப்பட வேண்டும்.
தலைமுடியை சுத்தம் செய்ய வழக்கமான ஷாம்பூவைப் பயன்படுத்தவும். பின்னர் கண்டிஷனர் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பிளாட் பீரை பயன்படுத்தவும்.
பீரை நேரடியாக தலைமுடியில் ஊற்றி, மெதுவாக வேர் முதல் நுனி வரை ஒரு நிமிடம் மசாஜ் செய்யவும்.
பீரில் உள்ள தாதுக்கள் உச்சந்தலையில் உள்ள தோலுக்கும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உங்களுக்கு எண்ணெய் மிக்க உச்சந்தலையில் இருந்தால் இது மிகவும் உதவியாக இருக்கும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம். இப்படி செய்து வந்தால் உங்கள் தலைமுடி பார்ப்பதற்கு பட்டுபோன்று இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |