நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோள்பட்டை வலி... காரணம் என்ன?
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோள்பட்டை வலி குறித்தும், அதற்கான காரணத்தையும், தீர்வையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்
நீரிழிவு நோய்
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது.
இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்துகள் உதவி செய்கின்றது.
உணவு பழக்கவழக்கங்கள், போதுமான உடல் உழைப்பு இல்லாத காரணத்தினாலும் ஏற்படுகின்றது. ஓரளவிற்கு நமது வாழ்க்கை முறையை கட்டுக்குள் வைத்துக் கொண்டால் நீரிழிவு நோய் குறித்த கவலை நாம் கொள்ள தேவையில்லை.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் தோல்பட்டை வலி குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தோள்பட்டை வலி
அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், தோள்பட்டை வலி பொதுவாக ஒட்டும் காப்ஸ்யூலிடிஸ் (உறைந்த தோள்பட்டை) காரணமாக ஏற்படுகின்றதாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பொதுவான ஒரு நிலை என்றும் பகிர்ந்து கொண்டார். பக்கவாதத்தால் (பக்கவாதம் காரணமாக) பாதிக்கப்பட்டவர்களுக்கும் தோள்பட்டை வலி ஏற்படலாம்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே பொதுவான பிரச்சினைகளில் ஒன்று தோள்பட்டை வலி உட்பட தசைக்கூட்டு பிரச்சினை ஆகும்.
நீரிழிவு நோயாளிகளில் நீண்ட காலமாக ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு, இணைப்பு திசுக்களுக்குள் இருக்கும் கொலாஜன் திசு நெகிழ்ச்சித் தன்மையைக் குறைத்து, தோள்பட்டையின் இயக்கத்தை பாதிக்கின்றது.
நீரிழிவு நோயாளிகள் மயோபதி என்று அழைக்கப்படும் தசைத்திறள் குறைவை எதிர்கொள்கின்றனர். இது தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் மீது அதிக அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதனால் தோள்பட்டை வலிமை குறைகிறது மற்றும் அதன் இயக்கம் குறைகிறது.
நீரிழிவு நோயாளிகளில் நாள்பட்ட அழற்சியின் விளைவாக தோள்பட்டை வலி அதிகரிக்கிறது, இது IL-6 எனப்படும் அழற்சிக்கு எதிரான சைட்டோகைன்களின் அளவு அதிகரிப்பதன் மூலம் குறிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
வலியை எவ்வாறு குணப்படுத்தலாம்?
வலி மேலாண்மைக்கு, ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம் என்றும், வலி கடுமையாக இருந்தால், ஊசி வடிவில் கார்டிகோஸ்டீராய்டுகள் கொடுக்கபடலாம் என்று மருத்துவர் பரிந்துரைக்கின்றனர்.
குறித்த நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை கட்டுப்பாடு குறைவாக இருந்தால், தோள்பட்டை வலி அதிகமாகின்றது. எனவே போதுமான ரத்த சர்க்கரைக் குறைவு மருந்துகள், உடல் செயல்பாடு, உணவு முறை இவற்றினை நிர்வகிப்பது அவசியமாகும்.
மேலும் தோள்களைச் சுற்றி இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்த சில பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |