மாத்திரை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் என்ன நடக்கும்
சர்ச்சை நோய் வந்துவிட்டாலே எந்த வயதினராக இருந்தாலும் வாயைக் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சர்க்கரை அளவு கூடுதலாக உள்ள பழ வகைகளை கூட தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
ஏனெனில் நீரிழிவு நோய் வளர்சிதை மாற்றக் கோளாறு, உடலின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது.
பலருக்கு அன்னாசிப்பழத்தினை நீரிழிவு நோயாளி சாப்பிடலாமா? கூடாதா என்ற சந்தேகம் இருக்கும்.
ஏன் என்றால் அன்னாச்சிப்பழம் வெப்பமண்டலத்தைச் சேர்ந்த சத்தான பழமாகும்.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன.
ஆனால் மற்ற சில பழங்களை விட அன்னாசியில் சர்க்கரையின் அளவு அதிகமிருப்பதால், இது இரத்த சர்க்கரையை பாதிக்க கூடியது. எனவே, அன்னாச்சி பழத்தை அளவோடு உட்கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அன்னாசி 51 முதல் 73 வரை கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.
நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா?
அன்னாசிப்பழத்தை ஒரு நாளைக்கு 100 கிராமுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது.
ஏனெனில் இதனை அதிகம் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கக்கூடும்.
மேலும், புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் பிற ஆதாரங்களையும் உட்கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயாளிகளும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
அன்னாசிப்பழத்தில் உள்ள பிற நன்மைகள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், வீக்கத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களைத் தடுக்கிறது.
அன்னாச்சி பழம் வைட்டமின் சியின் நல்ல மூலமாகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
அன்னாசிப்பழத்தில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையை குறைக்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும், கொழுப்பை குறைக்கவும், எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.