சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தொட்டுக் கூட பார்த்திடாதீங்க... மிகப்பெரிய ஆபத்தாம்
அன்னாசி பழத்தை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாக இருக்கும். இதில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல் நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன. அன்னாசிப்பழத்தில் இயற்கையான சர்க்கரை அடங்கியுள்ளது. எனவே, இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லதல்ல. அன்னாசி பழத்தில் ப்ரோம்லைன் உள்ளது.
இது நாம் உண்ணும் சில மருந்துகளோடு சேர்ந்து கொண்டு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். பழுக்காத அன்னாசி பழத்தை சாப்பிட்டாலோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலோ அது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அன்னாசி பழத்தை அதிகமாக உட்கொண்டால் பற்களில் அதிகம் கரை ஏற்படும். பற்களின் எனாமலின் மீதும் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
அன்னாசி பழம் சாப்பிடுவதால் சிலருக்கு லேசான அலர்ஜிகள் ஏற்படலாம். அன்னாசி பழத்தில் அதிக அளவிலான அசிடிட்டி உள்ளது.