இந்த உணவுகளை சாப்பிட்டால் சக்கரை அளவு சட்டினு அதிகமாகும்... என்ன உணவுகள் தெரியுமா?
முற்காலத்தில் இருந்த மனிதர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார்கள். ஆனால் வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் தவறான உணவுப்பழக்கவழக்கத்தால் நோயாளிகளின் வர்க்கம் அதிகமாக காணப்படுகிறது.
அதிலும் சக்கரை நோயாளிகள் இன்று அதிகமாக காணப்படுகின்றனர். இதிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதற்காக தான் இந்த பதிவில் சக்கரை நோயாளிகள் சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
உண்ணகூடாத உணவுகள்
சக்கரை நோயாளிகளுக்கு உணவு உண்டபின் சக்கரையின் அளவு 150 என்ற அளவில் கட்டாயமாக இருக்க வேண்டும். இதற்கு மேல் இருந்தால் அல்லது 200 ற்கு அதிகமாக இருந்தால் ஆபத்து வரும்.
பசிக்கும் நேரத்தில் துரித உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் பரோட்டோ, எக்ரோல், பப்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது. மாப்பொருள் ரத்த சக்கரை அளவை அதிகரிக்கும்.
மாப்பொருட்களை கொண்ட உணவுகளை சாப்பிடும் போது நமது உடலில் உள்ள இன்சுலின் உற்பத்திக்கு அது எதிராக செயற்படும். இதனால் ரத்தத்தில் உள்ள சக்கரை அளவு கட்டுப்படாது.
யூஸ் கடைகளில் செயற்கை சுவையூட்டிகள் கொண்டு தயாரிக்கப்படும் யூஸ்களை வாங்கி குடிக்க கூடாது. இது நமது உடலுக்கு கேடு விளைவிக்கும்.
எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள், சிப்ஸ், பர்கர், பீட்சா போன்ற உணவுகளை சாப்பிட்டால் நம் ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிக்கும்.
எனவே இந்த உணவுகளை உட்கொள்ள கூடாது. குளிர்பானங்கள் குடிக்கவே கூடாது இது குடித்தால் சக்கரை அளவு 200 ஐ தாண்டும். ஸ்வீட் சிரப் சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் டீ, காஃபி போன்ற பானங்கள் குடித்தலை தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |