நீரிழிவு நோயாளிகள் பயப்படாமல் சாப்பிட வேண்டிய பழங்கள்... கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இன்றைய காலத்தில் சிறு வயதினர் முதல் முதியோர் வரை எல்லோருக்கும் வரக்கூடியதாக நீரிழிவு நோய் மாறிவருகின்றது.
கணையத்தால் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத போது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் சரியாகப் பயன்படுத்தாத நிலையில் தான் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படுகின்றது.
உடலில் இரண்டு வகையான நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர். டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவில் எந்த பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை மருத்துவரிடம் பரிசோதனை செய்த பின்பு அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளவும்.
மேலும் சர்க்கரை நோயானது இதயம், சிறுநீரகம், கண்கள், நரம்பு மண்டலங்கள் ஆகிய உறுப்புகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் உயிருக்கே ஆபத்தான நிலையில் கொண்டு செல்கின்றது.
தற்போது நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய பழங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆரஞ்சு:
ஆரஞ்சில் குறைந்த கொழுப்பு மட்டுமின்றி வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாக இருக்கின்றது.
கிரான்பெர்ரி:
சிறுநீர் பாதை தொற்று மற்றும் ரத்த சர்க்கரையை சீராக வைத்துக்கொள்ள கிரான்பெர்ரி பழம் உதவுகின்றது. இதில் ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளதால் நீரிழிவு நோயாளிக்கு நன்மை பயக்கக்கூடும்.
மாதுளை:
இரும்புச்சத்து வளமாக இருக்கக்கூடிய மாதுளை பழமானது, பல நாட்களாக இருக்கும் சர்க்கரை நோயை எதிர்த்து போராடும் தன்மை இருக்கின்றதாம்.
பப்பாளி:
உடம்பில் இருக்கும் செல்கள், இதயம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தடுக்க பப்பாளி உதவுவதுடன், நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்.
பீச்:
வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-ஏ நிறைந்துள்ள பீச் பழத்தில் கரோட்டினாய்டு உள்ளது. இவை சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நன்மை அளிக்கின்றது.
கொய்யா:
பசியுணர்வு கட்டுப்படுத்தவும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் வைத்திருக்கும் கொய்யா பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நாவல்பழம்:
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க நாவல் பழத்தின் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் கட்டுக்குள் வைக்கப்படும்.
நெல்லிக்காய்:
வைட்டமின் சி மற்றும் நார்சத்து அதிகம் இருக்கக்கூடிய பழம் நெல்லிக்காய். பல நோய்களுக்கு தீர்வாக இருப்பதுடன், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்ததாகும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான மருத்துவரை அனுகி மருந்து எடுத்துக்கொள்வதுடன், மேலே கூறப்பட்டுள்ள பழங்களை எடுத்துக்கொண்டால் கட்டுக்குள் வைக்க முடியும்.