நீரிழிவு நோயாளிகள் உடல் எடை குறைவது ஆபத்தா? அதிர்ச்சியளிக்கும் உண்மை
இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது அனைத்து மக்களையும் பயமுறுத்தி வருகின்றது. 40வயதிற்கும் குறைவாக இருப்பவர்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவ்வப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவினை மருத்துவபரிசோதனை செய்து கொள்வது தற்போது அவசியமாகியுள்ளது. மேலும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, இறுதியில் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
நீரிழிவு நோயாளிகள் எடைகுறைவது ஏன்?
பொதுவாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து இருக்கின்றது. இதில் மாவுச்சத்தில் குளுக்கோஸ் அதிகமாக உள்ளது. இவற்றை மனிதன் உடம்பில் சுரக்கும் இன்சுலின் செல்களுக்கு எடுத்துச் சென்று சக்தியை அளிக்கின்றது.
ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு குறைவாக சுரப்பதினால், செல்களுக்கு குளுக்கோஸை எடுத்துச் செல்ல முடிவதில்லை. இதனால் தசை மற்றும் கொழுப்பில் உள்ள குளுக்கோஸை பயன்படுத்துவதால் தான் உடல் எடை குறைகின்றனர்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கக்கூடாது. நீரிழிவு நோயாளிகளில் உட்கொள்ளும் சில மாத்திரைகள் உடல் எடையை குறைய வைக்கின்றது.
ஹைபர் தைராய்டிசம் அல்லது புற்று நோய் அல்லது செலியாக் நோய் போன்ற நோய்களின் பாதிப்பு இருந்தாலும் உடல் எடை குறைகின்றது.
குறிப்பாக ஆரோக்கியமான உணவினை எடுத்துக்கொண்டு உடல் எடையைக் கட்டுப்பாடுடன் வைத்துக்கொண்டால் நீரிழிவு நோய் வருவதை நம்மால் தடுக்க முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |