300 வரை சுகர் லெவல் ஏறிடுச்சா? கவலையே வேண்டாம் 90 ஆக குறைக்க இந்த ஒரே ஒரு டீ போதும்!
கணையத்தின் பீட்டா செல்களால் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரும் குளூக்கோஸின் அளவு கூடும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `சர்க்கரைநோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம்.
சர்க்கரைநோய், உடலுக்குப் பலவிதமான நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும் நுழைவாயில். இதயநோய், சிறுநீரகக் கோளாறு, பக்கவாதம்… கூறிக்கொண்டே செல்லாம்.
டைப் 1 சர்க்கரைநோய்:
சிறு வயதிலேயே ஏற்படும் இவ்வகையில், கணையத்தால் இன்சுலினைச் சுரக்க முடிவதில்லை. எனவே, உடலுக்குத் தேவையான இன்சுலினை வெளியே இருந்து உடலுக்குள் செலுத்தவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
இதனால் மாத்திரைகளுடன் ஊசி மருந்தும் கட்டாயமாக்கப்படும். இவ்வகை சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குறைவான எடையுள்ளவர்களாக இருப்பார்கள்.
டைப் 2 சர்க்கரைநோய்:
பெரியவர்களுக்கு ஏற்படும் இந்த வகையில் இன்சுலின் சுரப்பு இருந்தாலும், மிக மெதுவாகத்தான் தன் பணியைச் செய்யும். எனவேதான் மாத்திரைகளுடன் உடற்பயிற்சி செய்யவேண்டியிருக்கும்.
உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். இந்த வகை டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள்.
நாம் எடுத்து கொள்ளும் உணவுமுறை தான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ருசியான உணவை தேடி ஆரோக்கியமான உணவை இழந்து விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
நம் சமையறையில் இருக்கும் பொருட்களை கொண்டே பல நோய்களை விரட்டி அடித்து விடலாம். குறிப்பாக வெந்தயத்தில் பல நன்மைகள் உள்ளது. சரி வாங்க வெந்தயத்தை பயன்படுத்தி எப்படி நீரிழிவு நோயில் இருந்து வெளியே வருவது குறித்து பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து கொண்டு அதில் தேவையான அளவு வெந்தயம் சேர்த்து அதில் வெந்நீரை ஊற்றி கிட்டத்தட்ட 10 நிமிடம் நன்றாக ஊறவைக்கவும். சுவைக்கு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை கலந்து கொண்டு வடிகட்டி சூடான தேனீராக பருகலாம்.