நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? பலரும் அறியாத உண்மை இதோ

Diabetes
By Manchu Aug 12, 2022 01:55 PM GMT
Report

பிஸ்தா போன்ற நட்ஸ்களை உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை 27 சதவீதம் குறைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏனெனில், அவற்றில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன.

இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கொழுப்புகள் ஆகும். மேலும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

ஏனெனில், பிஸ்தாவில், நல்ல கொழுப்புகள் மற்றும் ஃபைபர், மெக்னீசியம், செலினியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற நிறைந்த ஒரு உணவாக இருப்பதால் இவை நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும் இன்சுலினை மேம்படுத்தவும், கணைய செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கவும், கொழுப்பின் அளவை மேம்படுத்தவும், உதவுகின்றது.

அந்தவகையில் பிஸ்தாவை நீரழிவு நோயாளிகள் எடுத்துக்கொண்டால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? பலரும் அறியாத உண்மை இதோ | Diabetes Patient Pista Eats Benefits In Tamil

நன்மைகள் என்ன?

மற்ற நட்ஸ்களுடன் ஒப்பிடும்போது பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் பிஸ்தாவினை சாப்பிடுவது திருப்தியான உணர்வை அளிக்கின்றது.

உடலில் குளுக்கோஸ் அளவை திடீரென அதிகரிப்பதைக் குறைக்கின்றன. மற்றும் உடலின் சர்க்கரை அளவைக் கூட கட்டுப்படுத்த உதவும். எனவே தான் பிஸ்தாக்கள் கிளைசெமிக் குறியீட்டில் குறைவாக உள்ளன, பிஸ்தாக்கள் உடலின் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன மற்றும் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன, இவைகள் தான் நீரிழிவு நோயின் சிக்கல்கள் ஆகும். இவற்றினையே குறைப்பதால் தான் பிஸ்தா நீரழிவு நோயிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

பிஸ்தாவில் இருக்கும் பல்வேறு சத்துகள் மூலம் அவை இன்சுலின் உற்பத்திக்கு காரணமான கணையத்தின் பீட்டா செல்களைப் பாதுகாக்க உதவலாம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் பிற தீங்கு விளைவிக்கும் விளைவுகளைத் தடுக்கலாம்.

பிஸ்தாவில் காலிக் அமிலம், கேடசின் மற்றும் லுடோலின் போன்ற சத்துகள் இருப்பதால் பிஸ்தாக்களுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நீரிழிவு நோயைத் தடுக்கவும், நிலைமையை நிர்வகிக்கவும் உதவும்.  

நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? பலரும் அறியாத உண்மை இதோ | Diabetes Patient Pista Eats Benefits In Tamil

ஆரோக்கியமான கொழுப்புகள் அதிக நார்ச்சத்து உள்ளடக்கி இருப்பதால் உடலின் குளுக்கோஸை உறிஞ்சுவதை குறைப்பதன் மூலமும், உடலில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதன் மூலமும் நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது.

உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க பிஸ்தா உதவும், இதனால் கொலஸ்ட்ரால் மாற்றம், உயிரணுக்களின் செயல்பாடு மற்றும் இரத்த அழுத்தம், இதய நோய்களைத் தடுக்க தேவையான அனைத்து காரணிகளும் மேம்படும்.

பிஸ்தாவில் உள்ள மெக்னீசியம் மற்றும் அர்ஜினைனின் அளவு அதிகமாக இருப்பதால் இதயத்தின் தமனிகளில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் மெக்னீசியம் குறைபாடுடன் காணப்படுகிறார்கள். எனவே, பிஸ்தாவினை சாபிடுவதன் மூலம் தினசரி பரிந்துரைக்கப்பட்ட ஊட்டச்சத்து அளவை வழங்க உதவும்​.

நீரிழிவு நோயாளிகள் பிஸ்தா சாப்பிடலாமா? பலரும் அறியாத உண்மை இதோ | Diabetes Patient Pista Eats Benefits In Tamil

image: istockphoto.com/julia_sudnitskaya

பிஸ்தாவை தினசரி உட்கொள்ளலாமா?

பிஸ்தாக்களின் தினசரி உட்கொள்ள வேண்டிய அளவானது 28 கிராம் அல்லது 49 கர்னல்கள் ஆகும். இது சுமார் 160 கிலோகலோரி ஆற்றலை வழங்க உதவும்.  

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட அதிக கார்ப்ஸைக் கொண்ட அரிசி, பாஸ்தா மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளில் அவற்றைச் சேர்ப்பது, உணவுக்குப் பிறகு குளுக்கோஸ் ஸ்பைக்கைக் குறைக்க உதவும்.

மேலும், பிஸ்தாவினை சாப்பிடுவதின் மூலமாக மட்டுமே இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் வலுவான விளைவை உருவாக்க முடியும்.​பிஸ்தாக்களை உட்கொள்வதற்கான சிறந்த வழிகள் மரினேட்ஸ், கிரேவிஸ், பாஸ்தா, சல்சா அல்லது இறைச்சி ரெசிபிகள் போன்ற உணவுகளில் சேர்ப்பதன் மூலம் பிஸ்தாக்களை சாப்பிடலாம்.

தயிர் மற்றும் பழ சாலட்டுக்கு பிஸ்தா சிறந்தவை. பிஸ்தாவினை உலர்ந்த பழமாகவே சாப்பிடலாம் என்று இருப்பினும் கூட அவை சிறிதாக வறுக்கப்பட்ட பின் சாப்பிடுவது நல்லது.

அதிகமான பிஸ்தாக்களை சாப்பிடும்போது என்ன நடக்கும்?

பிஸ்தாவை அதிகமாக உட்கொள்வது வயிற்று பிரச்சினைகள், வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு, எடை அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US