நீரிழிவு நோயாளிகள் எலுமிச்சை சாறு அருந்தலாமா? யார் அருந்தக்கூடாதுனு தெரிஞ்சிக்கோங்க
கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தினை தவிர்க்க எலுமிச்சை மிக முக்கியமாக பயன்படுகின்றது. ஆம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் எலுமிச்சை குறித்து நீரிழிவு நோயாளிகளுக்கு சந்தேகம் இருக்கும்.
நீரிழிவு நோயாளிகள் எலுமிச்சை சாறு அருந்தலாமா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உணவு கட்டுப்பாடுகள் இருக்கும் என்பதும் குறிப்பாக ஒரு சில பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் எலுமிச்சை சாறு என்பது கோடை நேரத்தில் மிகவும் உடலுக்கு குளிர்ச்சியை தரும் என்றாலும் சர்க்கரை நோயாளிகள் இதனை குடிக்கலாமா என்ற சந்தேகம் அதிகமாகவே இருக்கின்றது.
ஆம் சர்க்கரை நோயாளிகள் எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். எலுமிச்சை பழத்தில் சர்க்கரையை குறைக்கும தன்மை உள்ளதால், தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.
ஆனால் சிறுநீரக சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நீரிழிவு நோயாளிகள் எலுமிச்சையை எடுத்துக்கொள்ளக் கூடாதாம்.